ஒருநாள் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா ? அடடா எத்தனை சதங்கள் !

விளையாட்டு

கிரிக்கெட் தொடங்கியது முதல் தற்போது வரை பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், விவ் ரிச்சர்ட்ஸ், குமார் சங்கக்கார, ரிக்கி பாண்டிங் மற்றும் பல துடுப்பாட்ட வீரர்கள் தங்களின் தாய் நாட்டிற்காக ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களை ஒரு பெரும் மேதாவிகளாக செதுக்கி கொண்டனர். சில வீரர்கள் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக மட்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ஓட்ட குவிப்பில் ஈடுபடுவர். நாம் இங்கு ஒரு அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சத்தங்களை பெற்ற இரண்டு இந்திய வீரர்களை பற்றி பார்க்கலாம்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கரின் பெயர் இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியப்படும் வகையில் இல்லை. ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கிய சாதனைகள் சச்சின் டெண்டுல்கரின் கட்டுப்பட்டிலே உள்ளது. ஆஸ்திரேலிய அணி 2000 முதல் 2008 ஆண்டுகள் வரை கிரிக்கெட்டில் கொடி கட்டி பறந்தன. இந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது பெரும்பாலான சதங்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையே இப்பதிவை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது. மேலும் டெண்டுல்கர் இலங்கை அணிக்கு எதிராக 8 ஒருநாள் சதங்களை விளாசியுள்ளார். இவர் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 71 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 44.59 சராசரியுடன் 3077 ரன்களை குவித்துள்ளார். இதில் 15 அரைசதங்கள் மற்றும் 9 சதங்கள் அடங்கும்.


விராட் கோலி
விராட் கோலி ஏற்கனவே தன்னை ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த துடுப்பாட்ட வீரராக நிரூபித்துவிட்டதுடன் மற்றும் பல சாதனைகளை புரிந்து வருகிறார். இவரது புள்ளிவிவரங்களை பார்க்கும் போது கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது தெட்டத் தெளிவாக தெரிகிறது. விராட் கோலி உலகின் அனைத்து கிரிக்கெட் விளையாடும் அணிகளுக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்கால தலைமுறையில் முன்னணி துடுப்பாட்ட வீரராக விராட் கோலி திகழ்கிறார்.

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் ஓட்டம் குவிக்க ஏற்ற அணியாக தேர்வு செய்த அணிகள் – ஆஸ்திரேலியா, மேக்கிந்தியத் தீவுகள், இலங்கை. இந்த 3 அணிகளுக்கு எதிராகவும் தலா 8 சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி தனது இளம் வயதிலேயே இந்த சிறப்பான மைல்கல்லை அடைந்து விட்ட காரணத்தால் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கவில்லை. காரணம் அவர் இன்னும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை புரிவார் என்பதால் தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *