“குட் பாய்” ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. அணியின் கேப்டனாக இளம் இந்திய வீரர் !! அது யார் தெரியுமா ?

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் பல்வேறு விதமான இருபதுக்கு இருபது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் அதிக அளவில் பிரபலம் அடைகிறது. அதிக அளவில் பணம் செலவழித்து அதிகளவிலான வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்ற காரணத்தின் அடிப்படையிலேயே இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இவ்வாறு விறுவிறுப்பு தன்மை வாய்ந்ததாகவும் பிரபலமானதாகவும் அமைந்திருக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பமான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இதுவரையில் 13 வருடங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் ஐக்கிய இராச்சியத்தில் மிக அழகான முறையில் நிறைவு பெற்றிருந்தது. 2020ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5ஆவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

இவ்வாறான நிலையில் அடுத்த தொடரானது 2021ஆம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதம் அளவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அனைத்துப் போட்டிகளும் இந்தியாவிலேயே நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 8 அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது. 2022 தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளன.

இது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் 2021ஆம் ஆண்டில் விளையாடும் ஐபிஎல் அணிகளின் வீரர்களை தெரிவு செய்வதற்கான சிறிய அளவிலான ஏலம் பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் தங்களது அணிகளில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பெயர் விபரத்தை தங்களுக்கு அறிவிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் அனைத்து அணிகளுக்கும் அறிவித்திருக்கிறது.

 இவ்வாறானதொரு நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டுவரும் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியது

2018 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித்தை 12.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி தக்க வைத்துக் கொண்டது. ஆனால் தற்போது ராஜஸ்தான் அணி ஸ்மித்தை வெளியேற்றுவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் புதிய தலைவராக சஞ்சு சம்சன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *