44 வயதிலும் அதிரடியாக அரைச்சதம் குவித்த நம்ம Dil Scoop டில்ஷான் ! மெல்போர்ன் நகரமே அசந்து போனது

விளையாட்டு

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு காலகட்டத்தில் ஜொலித்த வீரர்கள் தொடர்ந்து அவர்கள் ஜொலித்துக் கொண்டே இருக்க முடியாது. காரணம் ஒரு வீரர் உடைய திறமை வயது போகின்ற போது மங்கிப் போகிறது. ஆனால் ஒருசில வீரர்களின் திறமை எத்தனை வயதானாலும் அப்படியே இருக்கிறது. இருந்தும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கின்ற ஒரு காரணத்தின் அடிப்படையில் இவ்வாறு ஒரு காலகட்டத்தில் பிரகாசித்த வீரர்கள் சர்வதேச ரீதியில் இருந்தும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து அறிவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது.


தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி வருகின்ற வீரர்கள் குறிப்பிட்ட வயதானதன் பின் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவும்  கூட கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள். அந்தவகையில் நாம் இந்த இடத்தில் பார்க்கப்போவது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான திலகரட்ண டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து ஒரு கழகம் ஒன்றுக்காக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான 44 வயதுடைய திலகரத்ன டில்ஷான் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இவ்வாறான நிலையில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரரான திலகரத்ன டில்ஷான் கேசி சவுத் மெல்போர் அணியில் விளையாடி வருகிறார்.

டென்டெனோங் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் திலகரத்ன டில்ஷான் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரு துறைகளிலும் பிரகாசித்தார். பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசிய டில்ஷான் 32 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார். துடுப்பாட்டத்தில் பிரகாசித்த டில்ஷான் 42 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்களாக அரைச்சதம் கடந்து மொத்தமாக 53 ஓட்டங்களை குவித்தார்.

குறித்த போட்டியில் டில்ஷானின் பிரகாசிப்பு மூலம் கேசி சவுத் மெல்போர் அணி 183 என்ற வெற்றியிலக்கை கடந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *