இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பகாலங்களில் 9 அணிகள் பங்கேற்று கொண்ட இந்த தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வருகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் தொடரானது நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வந்த நிலையிலும் கூட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முயற்சியின் காரணமாக குறித்த தொடர் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
அந்த தொடரின் சம்பியனாக ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவானதுடன் அதிக தடவைகள் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய அணியாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான தொடரில் வீரர்களை கொள்வனவு செய்வதற்கான சிறிய அளவிலான ஏலமானது கடந்த வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இதன்போது எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் பலர் அணிகளில் இணைக்கப்படாத நிலையில் எதிர்பார்க்கப்படாத சில வீரர்கள் அணியில் பல விலைகளில் ஏலத்தில் கொள்வனவு கொள்வனவு செய்யப்பட்டமை எல்லோரையும் வியக்க வைத்தது. அவ்வாறு ஏலத்தில் கொள்வனவான வீரர்களில் எல்லோரையும் வியக்க வைத்த ஒரு வீரர் சச்சின் டெண்டுல்கரினுடைய மகன் அர்ஜூன் டெண்டுல்கர்.
போதிய அளவு கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இல்லாமல் இருந்தாலும் அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்ற காரணத்தினாலேயே மும்பை இந்தியன்ஸ் அணியில் எவ்வாறு அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாயில் இணைக்கப்பட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் ஏலத்தில் இறுதி வீரராகவும் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணியை கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு நிலையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் உடையை ஜேர்சி அணிந்து களமிறங்க ஆர்வமாக இருக்கிறேன்.
சிறு வயதில் இருந்தே நான் மும்பை அணியின் தீவிர இரசிகன். என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஏலம் எடுத்த பயிற்சியாளர், அலுவலர்கள் ஆகியோருக்கு நன்றி. மும்பை அணியோடு இணையவுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. என தெரிவித்தார்.