ஐ.பி.எல் நிர்வாகத்தின் முகத்தில் சா ணியை பூசிய ஸ்ரீசாந்த்.. சொன்னதை சொன்னபடி செய்து காட்டினார் !! – வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு வீரர் தான் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். ஐ.பிஎல் தொடரின் போது சூ தாட்டத்தில் ஈடுபட்ட கு ற்றச்சாட்டின் அடிப்படையில் ஸ்ரீசாந்த்க்கு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடைக் காலம் நிறைவடைந்து ஸ்ரீசாந்த் முதலன் முதலாக அண்மையில் நடைபெற்று முடிந்த சையித் முஷ்டாக் அலி கிண்ண தொடரின் போது களமிறங்கினார். அந்தத் தொடரின் போது அவர் கேரளா அணிக்காக விளையாடினார்.

இவ்வாறான நிலையில் 2021ஆம் ஆண்டுக்காக நடைபெறவிருக்கின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்கான வீரர்களுக்கான ஏலம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அந்த ஏலத்தில் ஸ்ரீசாந்த் தன்னுடைய பெயரை பதிவு செய்து இருந்தார். ஐ.பி.எல் நிர்வாகத்தினால் இறுதிநேரத்தில் வெளியிடப்பட்ட 292 வீரர்கள் அடங்கிய பட்டியலில் ஸ்ரீசாந்த்தினுடைய பெயர் இடம்பெறவில்லை. இது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் அமைந்திருந்தது.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதே எனது நோக்கம் எனவும் ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார். ஐபிஎல் ஏலத்தில் தெரிவாகாததை தொடர்ந்து வீடியோ காணொளி ஒன்றினை வெளியிட்ட ஸ்ரீசாந்த், எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் நாம் திரும்பத் திரும்ப முயற்சி செய்து கொண்டுதான் இருப்பேன். ஒருபோதும் சோர்ந்து போக மாட்டேன் என தெரிவித்திருந்தார்.

தான் சொன்னதைப் போன்று மீண்டும் ஒருமுறை செய்து காட்டியிருக்கிறார் ஸ்ரீசாந்த். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்ற விஜய் ஹசாரே கிண்ண தொடரில் கேரளா அணிக்காக விளையாடி வரும் ஸ்ரீசாந்த், ஒடிசா அணிக்கு எதிரான போட்டியின்போது 2 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோன்று உத்தரபிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார்.

ஐ.பி.எல் தொடரின் ஏலத்தில் புற க்கணிக்கப் பட்டாலும் கூட தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவதே நோக்கம் என கூறி மனம் தளராமல் தற்போது சிறப்பாக விளையாடி வருகின்ற ஸ்ரீசாந்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *