அன்று எங்களுக்கு ம ரண அ டி அ டிச்சாரு.. அதால தான் நாங்க பிளான் போட்டு தூக்கினம். இந்த முறை எங்களுக்கு கோப்பையை வென்றுதரப்போறாரு.. சம்பவம் இருக்கு மிஸ் பான்னாதிங்க – கோஹ்லி ஓபன் டாக்

விளையாட்டு

14வது இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது இன்று ஆரம்பமானது. முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் – ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த சில வருடங்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முக்கிய வீரராக விளையாடி வந்த கிளேன் மெக்ஸ்வெல் அண்மைக் காலங்களாக சரியான முறையில் விளையாடாத காரணத்தினால் அவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவ்வாறான நிலையில் 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்காக வீரர்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தின் போது அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான கிளேன் மெக்வெல்லை விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொள்வனவு செய்தது.

தற்போது பெங்களூரு அணியில் இடம் பெற்றிருக்கும் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான மெக்ஸ்வெல் இந்த வருடம் அந்த அணிக்காக சிறப்பாக செயற்படுவார் என பலரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், அந்த அணியின் தலைவர் விராட் கோலி மெக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய அணிக்கு இந்த முறை கிண்ணத்தை ஜெயித்து தருவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மெக்ஸ்வெல்லை ஏலம் எடுப்பதற்கு முன்னராகவே திட்டமிட்டிருந்தோம். கடும் போட்டி இருக்கும் என்பது எதிர்பார்த்த ஒரு விடயம் தான். அதிர்ஷ்டவசமாக அவர் எங்களுக்கு கிடைத்து விட்டார் என தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த விராட் கோலி, மெக்ஸ்வெல் இந்திய அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது மிக சிறப்பாக விளையாடிருந்தார். அதேபோன்று 14வது ஐபிஎல் தொடரிலும் அதிரடியாக விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *