கிரிக்கெட் காலணிகளை கூட வாங்க முடியாத நிலையில் தனது முயற்சியின் மூலம் இன்று ராஜஸ்தான் அணியின் கீ ப்ளேயராக மாறிய சகரிய்யா !! அவரின் கதையை கேட்டால் கண்ணீர் வரும். அவருக்கு உதவியது ஒரு ஆஸ்திரேலியன்

விளையாட்டு

14ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் திகதி முதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்றைய தினம் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் இலவன் பஞ்சாப் மற்றும் சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர், இந்த போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சம்சன் தெரிவானார். ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பந்து வீச்சில் சேத்தன் சகரிய்யா 4 ஓவர்கள் பந்துவீசி 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 23 வயதான குறித்த வீரர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிரா அணிக்காக களம் இறங்கினார்.

இதுதான் அவருக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் அமைந்திருந்தது. பின்னர் தற்போது நடைபெற்று வருகின்ற 14 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். தனது முதல் போட்டியிலேயே இவர் அனைவருடைய கவனத்தையும் திருப்பி இருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ராஜ்கோட்டிற்கு அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் 13ஆவது தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நெட் பௌலராக தேர்வுசெய்யப்பட்டார். தற்போது ஐபிஎல் 14ஆவது சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக 1.2 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார். 2018-2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடினார். 15 முதல்தரப் போட்டிகள், 7 லிஸ்ட் ஏ போட்டிகள் 16 டி20 போட்டிகளிலும் சகார்யா பங்கேற்றுள்ளார்.

2020ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை வென்ற சௌராஷ்டிரா அணியில் சகார்யா இடம்பெற்றிருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று 4.90 எகனாமியுடன் 12 விக்கெட்களை கைப்பற்றினார். இதனால்தான், ஐபிஎல் மினி ஏலத்தின்போது இவரை ஏலம் எடுக்க பல அணிகள் முன்வந்தன.

6 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கோச் பேகர் டிராபி தொடரில் கர்நாடகா அன்டர் 19 அணியில் இடம்பெற்றிருந்த சகார்யா, சிறப்பாகப் பந்துவீசி விக்கெட் மழை பொழிந்தார். ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால், அவுஸ்திரேலிய அணி முன்னாள் பந்துவீச்சாளர் கிளென் மெக்ரா நடத்தி வந்த எம்.ஆர்.எஃப் பேஸ் தொண்டு நிறுவனத்திடம் இருந்து சகார்யாவுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டது. சகார்யாவுக்கு அது பெரும் உதவிக்கரமாக இருந்தது.

சேத்தன் சகரிய்யாவின் குடும்பம் வறுமையில் இருந்ததால், அவரால் முறையான கிரிக்கெட் காலணிகளை கூட வாங்க முடியவில்லை. சௌராஷ்டிரா அணியில் இடம்பெற்றிருந்த மூத்த பேட்ஸ்மேன் ஷெல்டோன் ஜாக்சன்தான் சகார்யாவுக்கு போதிய உதவிகளை செய்து வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *