முழு கிரிக்கெட் உலகிலும் நாங்க தான் ராஜா.. ஹெட்ரிக் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி.. (இதற்கு தமிழனின் பங்கும் அளப்பெரியது) – முழு விவரம் உள்ளே

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதின் மார்ச் மாதத்திற்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் வென்றுள்ளார். ரசிகர்களின் வாக்கெடுப்பின் மூலமாக நடைபெற்ற போட்டியில் புவனேஷ்வர் குமார் இவ்வாறு மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் பெயரிடப்பட்டுள்ளார். முதல் முதலாக கடந்த 2021ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திற்கு அறிவிக்கப்பட்ட ஆடவர் பிரிவில் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் விக்கெட் காப்பாளரானா ரிஷப் பண்ட் அவுஸ்திரேலிய அணியுடனான தொடரின் போது சிறப்பாக விளையாடியதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த பெப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் அசத்தி இருந்த தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பெப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக பெயரிடப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச தொடரின் போது அணிக்கு திரும்பி சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதன் பிரகாரம் இதுவரையில் நடைபெற்றுள்ள ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மூன்று மாதங்களுக்கான ஐசிசி யின் சிறந்த வீரருக்கான விருதுகளை இந்திய அணி வீரர்கள் வென்றுள்ளமை இந்திய அணிக்கும் பெருமை தரக்கூடிய விடயமாக அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *