நான் செய்த இந்த தவறு தான் இறுதி ஓவர் வரை போட்டி செல்ல காரணம். இல்லாட்டி ராஜஸ்தான் எப்பவோ காலி – பரிசளிப்பு நிகழ்வில் ஒப்புக்கொண்ட கேப்டன் ராகுல்

விளையாட்டு

2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரானது கடந்த 9ஆம் திகதியிலிருந்து சென்னையில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுவரும் நிலையில் தொடரின் நான்காவது லீக் போட்டியானது பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளுக்குடையில் நடைபெற்றது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது இந்த வருட ஐபிஎல் தொடரில் புதியதொரு புதிய அணித்தலைவர் சஞ்சு சாம்சன் தலைமையில் களம் இறங்கியிருக்கிறது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இடையில் நடைபெற்ற போட்டியானது மிகவும் விறுவிறுப்பான ஒரு போட்டியாக அமைந்தது. 

கடைசி பந்து வரை அனைத்து ரசிகர்களுக்கும் உட்கார்ந்து பார்க்க கூடிய அளவுக்கு இந்த போட்டி விறுவிறுப்பு தன்மையாக மாறி இருந்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களை குவித்தது. 222 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இறுதி நேரத்தில் நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இவ்வாறான நிலையில் போட்டியின் வெற்றி அணித்தலைவராக திகழ்ந்த கே.எல் ராகுல் போட்டியின் பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். நான் எப்பொழுதும் எங்கள் அணியின் வீரர்களை நம்புவதை நிறுத்துவதில்லை. நிச்சயம் எங்களுக்கு தெரியும் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் நாங்கள் ஆட்டத்திற்கு திரும்பி விடுவோம் என்று நினைத்தேன். முதல் 11 – 12 ஓவர்கள் நாங்கள் சிறப்பாகவே பந்து வீசினோம். 

அதன்பிறகு போட்டி டைட்டாக சென்றது. இறுதியில் நாங்கள் ஒரு அணியாக வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்களும் சரி பந்து வீச்சாளர்களும் சரி தேவையான நேரத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். எங்கள் அணியில் மிகவும் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களை நாங்கள் அணியில் தேர்வு செய்து விளையாட வைத்து வருகிறோம்.

இந்த தொடரின் முதல் போட்டியிலேயே எங்களுக்கு வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி இறுதி வரை செல்ல நானும் ஒரு காரணம் என்று குறிப்பிட்டு பேசினார். அதற்கு காரணம் யாதெனில் 12 ரன்களில் இருந்த போது சாம்சன் கொடுத்த எளிமையான கேட்சை ராகுல் தவறவிட்டார். சாம்சன் 12 ரன்களில் பெற்ற வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி 119 ரன்கள் குவித்தார். 

ஒருவேளை சாம்சன் கொடுத்த கேட்சை முன்கூட்டியே ராகுல் பிடித்திருந்தால் போட்டி எப்போதோ முடிந்து இருக்கும் என்பதால் தான் செய்தது தவறு என்பதை ராகுல் ஒப்புக் கொண்டு அதை பரிசளிப்பு விழாவின் போது கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *