இலங்கை அணியுடன் மோதும் இந்திய அணி விபரம் !! எதிர்பாராத பல வீரர்களுக்கு வாய்ப்பு.. (என்னாதான் பெரிய கொம்பன் வந்தாலும் அசிங்கப்படுவது உறுதி)

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆனது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. குறித்த போட்டியானது எதிர்வருகின்ற ஜூன் மாதம் அதாவது அடுத்த மாதம் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இங்கிலாந்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான லோட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

குறித்த போட்டி நிறைவடைந்ததன் பின்னர் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆனது இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்வாறானதொரு நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபது-20 சர்வதேச தொடர் ஆகிய இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டே இலங்கைக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்யும் முடிவில் இருக்கிறது பிசிசிஐ. அதன்படி தோள்பட்டை உபாதையினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஸ்ரேயஷ் அய்யர், உபாதையில் இருந்து மீண்டு வந்தால் அவர்தான், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறுது.

ஒருவேளை அவருக்கு உபாதை குணமாகவில்லையென்றால், ஷிகர் தவானுக்கு கேப்டன் பொறுப்பு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்துக்கு செல்லவிருக்கும் இந்திய அணியல் இடம்பெறாத, புவனேஷ் குமார், ஹர்திக் பாண்டியா, ப்ரித்வி ஷா ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடிப்பார்கள். மேலும் தீபக் சஹார் மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் அற்புதமாக பந்து வீசிய இடது கை வேகப்பந்து வீச்சளரான சேத்தன் சக்காரியாவுக்கும் இடம் கிடைக்கும்.

ஸ்பின் பௌலிங் யூனிட்டை அனுபவ வீரரான சாஹல் மற்றும் இளம் வீரரான ராகுல் சஹாரும் நிரப்புவார்கள் என்று தெரிகிறது. மேலும் சமீபத்தில் இந்திய அணிக்கு அறிமுகமாகிய வீரர்களான இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் கண்டிப்பாக அணியில் இருப்பார்கள். தமிழக வீரரான தங்கராசு நடராஜன் ஐ.பி.எல் தொடரின் போது உபாதைக்கு உள்ளானதால் அவர் இலங்கை அணியுடனான தொடரிலும் இடம்பெற மாட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *