சிஎஸ்கே கிரிக்கெட்டுக்கு மட்டுமில்ல.. மனித நேயம் மிக்க ஒரு அணி.. ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் வென்ற சிஎஸ்கே அணி !!

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் நடைபெறுகின்ற பிரபலமான டி20 லீக் தொடர்களில் ஒன்றாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் அமைந்திருக்கிறது.

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டு வருகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 13 தொடர்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ள நிலையில் 14 நான்காவது தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி சென்னையில் ஆரம்பமானது.

இவ்வாறானதொரு நிலையில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுவந்த வீரர்கள் ஒரு சிலருக்கு கொரோ னா வைர ஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, நடைபெற்றுவந்த இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக சொந்த நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தமிழகத்திற்கு 450 ஒக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரகு குருநாத் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் குறித்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *