இலங்கையை வீழ்த்தி இலங்கை அணிக்கே ஆ ப் பு வைத்த தென்னாபிரிக்க அணி. அடடா ரொம்ப பா வ ம்யா !!

விளையாட்டு

உலகையும் தாக்கிய கொ ரோ னா வை ர ஸ் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்சமயம் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் இல்லாமலும் சில நாடுகளில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதாவது புதிதாக ஐ.சி.சி அறிமுகப்படுத்திய ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3 தொடர்கள் தற்சமயம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய அணியின் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோன்று இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நிறைவு பெற்றது. இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறுமுனையில் தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன் இல் நடைபெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

தென்னாபிரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளி பட்டியலில் ஒரு பாரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது இலங்கை அணியை வெற்றி கொண்ட தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை முந்தி 6ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

குறித்த தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை அணி ஆறாவது இடத்தில் காணப்பட்டது. தென்னாபிரிக்க அணி 7வது இடத்திலே காணப்பட்டது. ஆனால் இலங்கை அணியுடன் பெற்ற முதலாவது வெற்றியின் பின்னர் தென்னாபிரிக்க அணி 60 புள்ளிகளைப் பெற்று அதன் அடிப்படையில் தற்போது 84 புள்ளிகளைப் பெற்று இலங்கை அணியை இடத்திற்கு பின்தள்ளி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணி தற்போது 9 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. குறித்த பட்டியலில் முதலிடத்தில் அவுஸ்திரேலிய அணி காணப்படுகிறது. அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை விட குறைவான புள்ளிகளைப் பெற்றாலும் வெற்றிபெற்ற விகிதத்தின் அடிப்படையில் அவுஸ்ரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி காணப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *