விளம்பர வருமானத்தில் சினிமா பிரபலங்களை பின்தள்ளி முதலிடம் பிடித்த விராட் கோஹ்லி.. இத்தனை கோடியா……. வாய்பிழந்த ரசிகர்கள். டோனி பின்னடைவு

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், அணியின் தலைவருமான விராட் கோஹ்லியை இந்த உலகில் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிறிய வயது முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் தான் விராட் கோஹ்லி. கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து, பல சாதனைகளை முறியடித்து வருகின்ற விராட் கோஹ்லி கிரிக்கெட் விளையாட்டில் சம்பாதிப்பதற்கு அப்பால் விளம்பரங்களின் மூலமாகவும் ஏராளமாக கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். விராட் கோஹ்லி கிரிக்கெட் உலகில் ஒரு தலை சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்து வரும் நிலையில் விளம்பர நிறுவனங்கள் அவரை போட்டி போட்டு விளம்பரத்தில் நடிப்பதற்காக எடுக்கிறது.

இந்தியாவினுடைய பிரபலங்களில் ஒரு சிறந்த மதிப்புமிக்க பிரபலமாக தற்போது விராட் கோஹ்லி காணப்படுகிறார். ஆரம்ப காலங்களில் சினிமா துறையில் இருப்பவர்கள் தான் அதிகமான பிரபலமாகவும், விளம்பரங்களிலும் நடிப்பார்கள். ஆனால் விராட் கோஹ்லி ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து சினிமா துறையை பின்தள்ளி தற்போது அதிகம் சம்பாதிப்பவர்கள் முதலிடத்தில் இருக்கிறார்.

இவ்வாறான நிலையில் 2020ஆம் ஆண்டிற்கான இந்திய பிரபலங்களில் அதிகம் சம்பாதிப்பவர்களின் பெயர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் விராட் கோஹ்லி விளம்பர வருமானமாக 1737 கோடி சம்பாதித்து முதலிடத்தில் காணப்படுகிறார். அவர் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக தற்போது முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி இரண்டு இடங்கள் பின் தள்ளப்பட்டுள்ளார். மந்திர சிங் தோனி 2020ஆம் ஆண்டில் விளம்பரங்களின் மூலம் 262 கோடி சம்பாதித்துள்ளார்.

அக்ஷய் குமார் விளம்பரங்கள் மூலம் 860 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் உள்ளார். ரன்வீர் சிங் 740 கோடியுடனும், ஷாருக்கான் 371 கோடியுடனும், தீபிகா படுகோனே 364 கோடியுடனும் அதற்கு அடுத்த அடுத்த இடங்களில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *