‘கேட்கல கேட்கல.. இன்னும் சத்தமா’ பிகில் பாணியில் சென்னை ரசிகர்களை உசுப்பேத்திய விராட் கோஹ்லி.. வைரலாகும் வீடியோ

விளையாட்டு

வீடியோ கீழே தரப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. இதில் முதல் தொடரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டிருக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற ஒரு நிலையில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி செய்த ஒரு வேடிக்கையான நிகழ்வு கூட தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் 28வது ஓவர் நிறைவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி 63 ஓட்டங்கள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த வேளையில் இந்திய அணி மிகவும் வலுவான நிலையில் இருந்தது. இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தற்போது நாட்டில் நிலவும் கொ ரோ னா வைர ஸ் தாக்கம் காரணமாக ரசிகர்களுக்கு மைதானத்தில் போட்டியை பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே 2வது டெஸ்ட் போட்டியில் 50 சதவீதமான ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் இந்த போட்டியில் 28ஆவது ஓவர் நிறைவடைந்த நிலையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் முகமாக ரசிகர்களை விசில் போட சொன்னதுடன் நடிகர் விஜயின் பிகில் திரைப்படத்தின் பாணியில் ‘கேட்கல கேட்கல.. இன்னும் சத்தமா’ என்றவாறு சைகையால் காட்டினார்.

இதனை தொடர்ந்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். விராட் கோஹ்லி இவ்வாறு செய்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நாம் உங்களுக்காக கீழே தந்துள்ளோம்.

https://twitter.com/i/status/1360854727836110850

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *