IPL வரலாற்றில் மோசமான அணித்தலைவர்கள் என பெயரெடுத்த சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள்.. பட்டியல் உள்ளே !

Uncategorized

உலகின் மிகச் சிறந்த, t20 தொடர்களில், IPL தொடர் மிகவும் பிரபல்யமானது. இதில், வெளிநாட்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி, தங்கள் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். அது போன்று பலரும், பல IPL அணிகளுக்கு தலைமையேற்று, அணிகளை வெற்றி பெறவும் வைத்துள்ளனர். இதில் சிறந்த அணித்தலைவர் பட்டியலில், முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் தான் ரோஹித் சர்மா, மஹேந்திர சிங் தோனி. இவர்களின் வெற்றி சதவீதம் 60.1 மற்றும் 59.9 ஆகும். இவ்வாறான நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி, ஜாம்பவானாக இருந்து IPLல் அணித்தலைவராக ஏமாற்றம் அளித்த ஐந்து வீரர்களைப் பற்றி பார்க்கலாம்.


Sourav Ganguly
இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருப்பவர் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்திய சௌரவ் கங்குலி. இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்திய சௌரவ் கங்குலி IPL போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. கங்குலி கொல்கத்தா மற்றும் புனேவாரியஸ் அணிகளுக்கு அணி தலைவராக ஆக இருந்துள்ளார்.


42 IPL போட்டிகளுக்கு அணிதலைவராக இருந்துள் இவர் அதில் 17 போட்டிகளில் வெற்றியும், 25 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். இவரின் வெற்றி சதவீதம், 40.47 ஆகும்.


Shane watson
இந்த வரிசையில், நான்காம் இடத்தில் இருப்பவர், அவுஸ்திரேலியா அணியை சேர்ந்த Shane Watson. மிகச் சிறந்த சகலதுறை வீரரான இவர், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல், ரோயல் செல்ஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக IPLல் விளையாடியுள்ளார்.

இவர் 24 IPL போட்டிளுக்கு அணிதலைவராக இருந்து, 8 போட்டிகளில் வெற்றியும், 13 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளது. இவரின் வெற்றி சதவீதம், 39.13 ஆகும்.


Ajinkya Rahane
இந்த வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பவர், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஜின்கே ரகனே. IPLலில் ராஜஸ்தான் ராயல்ஸ், புனே வாரியர்ஸ் அணிகளுக்கு தலைவராக இருந்துள்ள இவர் 25 போட்டிகளுக்கு அணி தலைவராக இருந்து, 9 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளார். இவரின் வெற்றி சதவீதம், 36.0 ஆகும்.


Magela Jayawardene
இலங்கை அணியின் மிகச்சிறந்த சாதனை வீரர் மஹேலா ஜெயவர்த்தனே. இவர் IPLலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி, கொச்சி அணிகளுக்கு அணி தலைவராக இருந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்த மஹேல ஜெயவர்த்தனேக்கு, IPLலில் சிறப்பான தலைமையை கொடுக்க முடியவில்லை.


30 போட்டிகளுக்கு அணி தலைவராக இருந்துள்ள இவர். 9 போட்டியில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியும், 1 போட்டி சமநிலையிலும் முடிவடைந்துள்ளது. இவரின் வெற்றி சதவீதம் 35 ஆகும்.

Kumar sangakkra
இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் குமார் சங்ககாரா. இலங்கை அணியின் மிகச்சிறந்த விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குமார் சங்ககாரா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மிகவும் வேதனையான விடயம். IPL லில் மிக மோசமான அணி தலைவர் என்ற பெயரை எடுத்துள்ள இவர் . கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெக்கான் சார்ஜஸ் , சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு அணி தலைவராக இருந்துள்ளார்.


47 IPL போட்டிகளுக்கு அணி தலைவராக இருந்துள்ள இவர் 15 போட்டிகளில் வெற்றியும், 30 போட்டிகளில் தோல்வியும், 2 போட்டிகள் சமநிலையிலும் முடிவடைந்துள்ளது. இவரின் வெற்றி சதவீதம் 34.04 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *