ஏன் ராஜா இன்னும் அவ மானம் படனுமா ? ‘அடுத்த டெஸ்ட் போட்டி ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்க வேண்டும்’ – மூன்றாவது டெஸ்ட் ஹீரோ அக்ஷர் பட்டேல் ஓபன் டாக் !

விளையாட்டு

இங்கிலாந்து அணி இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடைபெற்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது தொடரில் 2-1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்று இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஆனது கிரிக்கெட் உலகின் மிகப் பெரிய மைதானமாக அமைக்கப்பட்டுள்ள அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. 5 நாட்கள் கொண்ட இந்த போட்டி வெறும் இரண்டே இரண்டு நாட்களில் முடிவுக்கு வந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அந்த மைதானம் தொடர்பில் விம ர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிகமாக சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கி இந்த போட்டி முடிவுக்கு வந்திருந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மாத்திரமல்லாமல் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் நேற்றைய போட்டியில் அதிக அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இவ்வாறானதொரு நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது

மாத்திரமல்லாமல் போட்டியின் உடைய ஆட்ட நாயகனாகவும் தெரிவான அக்ஷர் பட்டேல் இவ்வாறு தெரிவித்துள்ளார். பந்து வீச்சில் இந்த செயல்பாட்டை தொடர விரும்புகிறேன். நான் துடுப்பாட்டத்தில் பங்களிப்பை அளிக்காமல் இருக்கும் போது பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விக்கெட் வீழ்த்துவதே எனது பலம்.

இந்த ஆடுகளம் கடைசி டெஸ்ட் போட்டிக்கு அதே போன்று இருக்க வேண்டும். அதேபோல் நான் விக்கெட்டுகளையும் எடுக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *