ஒருநாள் தொடரில் சச்சின், பொண்டிங்கின் சாதனைகளை தூள் தூளாக நொறுக்கவுள்ள கிங் கோஹ்லி.. சாதனை விவரம் உள்ளே 

விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தொடரின் முதல் தொடரான டெஸ்ட் தொடரையும் அடுத்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது. இவ்வாறானதொரு நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான தொடரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரானது இன்று ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி சதம் விளாசும் பட்சத்தில் இரண்டு சாதனைகளையும் முறியடிக்க கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. 

இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் சாதனையை முறியடிப்பதுடன், இந்திய அணியில் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்வார். விராட் கோஹ்லி கடந்த 2019ஆம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சதம் கடந்த பின்னர் இதுவரையில் ஒரு சதம் கூட பெறவில்லை.

இவ்வாறான நிலையில் இன்று ஆரம்பமாகின்ற ஒருநாள் சர்வதேச தொடரின்போது விராட் கோஹ்லி சதம் அ டிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை சமன் செய்யப்பட இருக்கிறது. அதாவது சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் இதுவரையில் 20 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோஹ்லிக்கு சாதனையை சமன் செய்ய இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவைப்படுகிறது. 

இதேவேளை அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ரிக்கி பொன்டிங் அணி தலைவராக இதுவரை 41 சதங்களை விளாசி இருக்கும் நிலையில் விராட் கோலியும் 41 சதங்களை விளாசி சமநிலையில் உள்ளனார். மேலும் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இரண்டு வீரர்களும் தலா 22 சதங்களை பெற்றுள்ளனர். எனவே விராட் கோஹ்லி சதம் விளாசும் பட்சத்தில் ரிக்கி பொண்டிங்கின் இரண்டு சாதனைகள் முறியடிக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *