பக்கா பிளான் போட்டு தூக்கப்பட்ட வோர்னர்.. ‘இவர் தேவை என்பதால் தான் வோர்னர் நீக்கப்பட்டார்’ பயிற்சியாளர் பகீர் தகவல் !

விளையாட்டு

2021 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது தற்போது இந்தியாவில் மிகப் பெரும் சவால்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் கடந்த 2016ஆம் ஆண்டு சம்பியன் பட்டத்தை கைப்பற்றி கொண்ட டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. இவ்வாறு போட்டி ஆரம்பமாகி வரும் 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவரான டேவிட் வோர்னர் அணியில்இருந்து நீக்கி புதிய தலைவராக கேன் வில்லியம்சன் கொண்டுவரும் திட்டத்துடன் புதிய அணித்தலைவராக நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டேவிட் வார்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடவில்லை. மாறாக அவர் ஏனைய வீரர்களைப் போன்று தண்ணீர் போத்தல்களை சுமந்து சென்ற காட்சியும் கூட ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

டேவிட் வோர்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான டிரெவர் பெய்லிஸ் இவ்வாறு கருத்து தெரிவித்தார். ஹைதராபாத் அணி 11 பேர் கொண்ட லெவனில் இருந்து வோர்னரை நீக்கியது கடினமான முடிவாகும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ”டேவிட் வோர்னர் ஒரு சிறந்த வீரர். அவரை அணியில் இருந்து நீக்கியது மிகவும் கடினமானது தான். இந்த நீக்கம் ஏமாற்றத்தை தருகிறது. அணியின் நலன் கருதி மாற்று வீரர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *