அந்த மனசு தான் கடவுள்.. தந்தையை இழந்து அழுது கொண்டிருந்த போது கோலி சொன்ன அந்த வார்த்தை தான் என்னை விளையாட வைத்தது. – சிராஜ் சொன்ன விஷயம்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது இளம் வேகப் பந்து வீச்சாளர்கள் வரிசையில் முஹம்மது சிராஜ் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

அவர் இந்திய அணியில் அறிமுகம் பெற்ற ஆரம்ப காலங்களில் மிக சிறப்பாக விளையாடா விட்டாலும் கூட அண்மையில் அவுஸ்திரேலிய அணியுடனான சுற்றுப்பயணத்தின்போது அவர் தனது பந்துவீச்சு திறமையை சரியான முறையில் வெளிக்காட்டி தற்போது முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடனான தொடர் முடிவடைந்ததன் பின்னர் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற தொடரிலும் கூட மிகச் சிறப்பான முறையில் பிரகாசித்து இருந்த மொஹமட் சிராஜ் அதன் பின்னர் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி மிக சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகளை வீசி இந்த தொடரில் அதிக யார்க்கர் பந்துகளை வீசிய வீரராக வலம் வந்தார்.


இது ஒரு பக்கம் இருக்கின்ற நிலையில் இந்திய அணி கடந்த டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் மொஹமட் சிராஜின் தந்தை மா ரடைப்பு காரணமாக உ யிரிழந்தார். தனது தந்தையின் இறப்பினைத் தொடர்ந்து மிகவும் மனம் உடைந்து போயிருந்த காலத்தில் தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து சிறப்பான முறையிலே தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.


இவ்வாறான நிலையில் தனது தந்தையின் மறைவின் பின்னர் தான் கவலை அடைந்திருந்த போது இந்திய அணியின் தலைவர் விராட் கோலி சொன்ன ஆறுதல் வார்த்தைகள் என்னை பலம் ஆகியது என மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

நான் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பொழுது என் தந்தை இறந்த செய்தி எனக்கு கிடைத்தது. அதை கேட்டதும் நான் எனது அறையில் மனமுடைந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த கோலி என்னை இறுக கட்டிப்பிடித்து “நான் இருக்கிறேன் நீ எதைப் பற்றியும் கவலைப் படாதே” (I Am With You, Dont Worry) என்று என்னை தேற்றினார். அவர் கொடுத்த அந்த ஊக்கம் என்னை சிறப்பாக செயல்பட வைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *