கோலி அருந்தும் தண்ணீரின் விலை எவ்வளவு தெரியுமா.? நம்மில் பலர் அதற்கு தவம் இருக்க வேண்டும்.. அந்தளவுக்கு பெறுமதியானது

விளையாட்டு

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி குடிக்கும் தண்ணீர், பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள, யுஎயைn என்ற நிறுவனத்தின் தண்ணீர் போத்தல்கள் விராட் கோலிக்காக இந்தியா கொண்டுவரப்படுகின்றது. நாள் முழுக்க போட்டிகளில் விளையாடினாலும், கொஞ்சமும் ஸ்டாமினா குறையாமல் களத்தில் நிற்பவர் விராட் கோலி. மற்ற இந்திய அல்லது உலக கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில், இவரது உடற்தகுதி மேலோங்கி காணப்படுகின்றது என்பதை, பல உடற்தகுதி நிபுணர்களும் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆரோக்கியமான டயேட் என்பதை உணவுகளில் மட்டுமின்றி, தான் குடிக்கும் நீரிலும், பின்பற்றுகிறார், விராட் கோலி. இவர் குடிக்கும் தண்ணீர், பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. கோலி குடிப்பது அணியில் மற்ற வீரர்கள் எல்லாம் குடிப்பதை போன்ற தண்ணீர் கிடையாது.

இதன் விலை ஒரு லிட்டர் 600 ரூபாய். கோலி ஒருவர் மட்டும் தான் இந்திய அணியில் இந்த தண்ணீரை குடிக்கின்றாராம். விளையாடும் போது சரி வெளியே எங்கு போனாலும், சரி யுஎயைn தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்கின்றாராம். இந்த குடிநீர் 300 மில்லி லீட்டர் 500 மில்லி லீட்டர் 750 மில்லி லீட்டர் 1 லீட்டர் மற்றும் 1.5 லீட்டர் என்கிற வேறு அளவுகளில் கிடைக்கின்றது. அதில் கோலியின் சொய்ஸ் 1 லீட்டர்.

பொதுவாக நீரை பில்டர் செய்யும்போது, அதில் இருக்கும் மினரல் சத்துக்கள் வடிகட்டப்படுகின்றது. முழுமையான மினரல் சத்துக்கள் நமக்கு நீரில் இருந்து கிடைக்காமல் போகின்றது. ஆனால், Evian தண்ணீரில் மிகுதியான மினரல் சத்துக்கள் இயற்கையான முறையில் பில்டர் செய்யப்படுகின்றது. அதனால்தான் இதன் விலையும் கூடுதலாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *