கிரிக்கெட் ஜாம்பவானின் தொப்பி பல கோடி விலையில் ஏலம்.. அப்படி அந்த தொப்பியில் என்னதான் உள்ளது!! விபரம் இதோ

விளையாட்டு

கிரிக்கெட் உலகில் ஜாம்பவான்களில் ஒருவர் தான் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சேர். டொனால்ட் பிரட்மன். 1928 – 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் உலகையே தன் கையில் வைத்திருந்தவர்களில் ஒருவர் தான் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் லெஜெண்ட் என்றழைக்கப்படும் சேர். டொனால்ட் பிரட்மன். அவரை டன் பிரட்மன் என்று அழைப்பார்கள். 1908ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் பிறந்த டன் பிரட்மன் அவுஸ்திரேலிய அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

1928ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலேயே டன் பிரட்மன் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். 1948 ஆம் ஆண்டு இறுதியாக இங்கிலாந்து அணியுடனேயே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தார். மொத்தமாக 52 டெஸ்ட் போட்டிகளில் 80 இன்னிங்ஸ்களில் விளையாடினார்.

அவர் 29 சதங்கள் 13 அரை சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 6996 ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகள் குவித்தார். இதில் விசேடமாக குறிப்பிடக்கூடியது என்னவென்று சொன்னால் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் கிண்ண தொடரின் போது டன் பிராட்மன் 974 ஓட்டங்களை விளாசினார். குறித்த தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஒரு இன்னிங்ஸில் டன் பிராட்மேன் 334 ஓட்டங்களை விளாசினார்.

அதுவே அவருடைய தனி நபர் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகவும் திகழ்கிறது. இவ்வாறான நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய டன் பிராட்மன், 1928ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய தொப்பி ஏலத்துக்கு விற்பனையாகியிருக்கிறது.

1908ஆம் ஆண்டு பிறந்த சேர். டொனால்ட் பிரட்மன் கடந்த 2001ஆம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் வைத்து ம ர ண ம டை ந் தா ர். அவர் தன்னுடைய 92ஆவது வயதிலேயே ம ர ண ம டை ந் தா ர். சேர் டொன் பிராட்மன் தான் முதல் டெஸ்ட் போட்டியில் அணிந்து விளையாடிய தொப்பையை 1959ஆம் ஆண்டு அவரது நண்பருக்கு பரிசாக வழங்கியிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த தொப்பி ஏலத்திற்கு வந்து 2.5 கோடி ரூபாய் விலைக்கு விற்பனையாகி உள்ளது. அந்த அடிப்படையில் உலகத்தில் அதிக விலையில் விற்பனையான இரண்டாவது நினைவுச் சின்னமாகவும் குறித்த தொப்பி சாதனை படைத்தது.

குறித்த தொப்பியை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான பீட்டர் ப்ரீட்மேன் என்பவர் ஏலத்தில் வாங்கியுள்ளார். அவர் குறித்த தொப்பையை ஒரு காட்சிப் பொருளாக மாற்ற முயற்சி செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *