டெஸ்ட் அறிமுகத்தை பெறும் நம்ம நடராஜன்.. ஆனால் ஒரு கண்டிசன் !! ஆஸி. வில் கசிந்த தகவல்

விளையாட்டு

இந்திய அணியில் தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது சர்வதேச தொடர்கள் நிறைவுபெற்று தற்சமயம் நான்கு போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குறித்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில் தொடர் 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுள்ளது.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் 7ஆம் திகதி சிட்னி நகரில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் குழாமில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இசாந்த் சர்மா தொடரில் பங்குபற்றுவதற்கு முன்னரே உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடையாத காரணத்தின் அடிப்படையில் அவர் டெஸ்ட் கொள்ளாமல் இருந்து நீக்கப்பட்டார்.

முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முஹமட் ஷமி முதல் டெஸ்ட் போட்டியின் போது உபாதைக்குள்ளானதன் அடிப்படையில் அவர் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். இவ்வாறான நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவும் உபாதைக்கு உள்ளான நிலையில் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3.3 ஓவர்கள் மாத்திரம் வீசிய நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்.

உபாதைக்கு உள்ளான உமேஷ் யாதவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு ஓய்வு தேவை என்கின்ற காரணத்தினால் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இருந்து அவரை நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் இந்திய அணியின் தொடர்ந்து மூன்று உபாதைகள் ஏற்பட்டு உள்ளதன் காரணமாக இருபதுக்கு இருபது அணியில் விளையாடிய ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி மற்றும் 3ஆவது வீரராக தமிழக வீரர் தங்கராசு நடராஜன் ஆகியோர் அடுத்த இரண்டு போட்டிகளுக்குமான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவுக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியதுடன், டெஸ்ட் அணியின் வலைப்பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட தங்கராசு நடராஜன், மூன்றாவது போட்டியில் ஷர்துல் தாகூர் சொதப்பும் பட்சத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற அதிகமான வாய்ப்பு காணப்படுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *