திரும்பி வந்துட்டேன்னு சொல்லு… 6 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணியில் இணையும் நட்சத்திர ஆல்ரவுண்டர்

இந்திய அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணி 6 ஆண்டுகளின் பின்னர் ஒரு வீரர் களமிறங்குகிறார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இத்தொடரின் மூலம் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் பிரச்சினை தீர்ந்துள்ளதாக தெரிகிறது. இருவரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு, தனக்கான இடத்தை கிட்டதட்ட உறுதி செய்துவிட்டார். மேலும், பேட்டிங் வரிசையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. பந்துவீச்சில்தான் அக்சர் படேலை தவிர அனைவரும் சொதப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளது. செப்டம்பர் 28, ஒக்டோபர் 2,4 ஆகிய திகதிகளில் திருவனந்தபுரம், கௌகாதி, இந்தூரில் போட்டிகள் நடைபெறும். இதற்கான இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே அறிவிக்கப்பட்டது. இதில் ஹார்திக் பாண்டியா ஓய்வுக்காக நீக்கப்பட்டு, ஷாபஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். கொரானாவால் பாதிக்கப்பட்ட ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கி நடைபெறும். போட்டிகள் அக்டோபர் 6,9,11 ஆகிய தேதிகளில் லக்னோ, ராஞ்சி, டெல்லி ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது. இந்த சமயத்தில் இந்திய மெய்ண் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுவிடும். இதனால், இந்த ஒருநாள் தொடருக்கு இந்திய இளம் அணி களமிறங்க உள்ளது.
இதற்கான அணியை தேர்வு செய்யும் பணியில் பி.சி.சி.ஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அணியில் 32 வயதாகும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரிஷி தவனுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் 2016ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமான போது, காயம் ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.