இவங்க ரெண்டு பேரும் எதுக்கு இருக்காங்க! CSK அணியில் பெரிய பிரச்சனை! என்ன செய்வார் தோனி? குழப்பம்

CSK அணியில் ஆடும் முக்கியமான 2 வீரர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன.

இதப்பாருங்க> KKR vs CSK போட்டியின் போது ரவீந்திர ஜடேஜாவுக்கு MS தோனி ரசிகர்களின் “நாங்கள் மஹியைப் பார்க்க வேண்டும்” என்ற செய்தி வைரலானது.

CSK அணி வரிசையாக இரண்டு தோல்விகளை சந்தித்த நிலையில் அந்த இரண்டு வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

CSK பவுலிங்கில் மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். இவர்களின் பவுலிங் CSK அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுத்துள்ளது.

இதப்பாருங்க> WTC 2023 இறுதிப் போட்டி: இந்திய அணியில் அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா

ஆனால் மொயின் அலி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. அவரின் பேட்டிங் பார்மில் இல்லை. பவுலிங்கும் பெரிய பார்மில் இல்லை. அவர் பெரிதாக எந்த போட்டியிலும் விக்கெட் எடுக்கவில்லை.

பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பேட்டிங்கிலும் எந்த இடத்தில் இறங்கினாலும் பெரிதாக ஆடுவது இல்லை. அதனால் அவருக்கு பதிலாக CSK அணியில் சாண்ட்னர் ஆட வாய்ப்புகள் உள்ளன.

இதப்பாருங்க> WTC 2023 இறுதிப் போட்டி: இந்திய அணியில் அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா

இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் CSK வீரர் மிட்சல் சாண்ட்னர் சிறப்பாக ஆடினார். மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் CSK அணி எளிதாக வென்றது. முதலில் இறங்கிய மும்பை அணி CSKவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் CSK வீரர் சாண்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.

இதப்பாருங்க> தோனி நொண்டி, மிகுந்த வலியுடன் போராடினார், இரட்டிப்பு மறுத்தார்; ஃப்ளெமிங் காயத்தின் விவரங்களைக் கொடுத்தார் | மட்டைப்பந்து

இதனால் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இன்னொரு பக்கம் CSK அணியில் தற்போது அம்பதி ராயுடு மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 5 போட்டிகளில் அவரின் ரெக்கார்ட் மிக மோசமாக உள்ளது.

இன்னிங்ஸ்:- 5
ரன்கள்:- 74
சராசரி:- 24.67
ஸ்டிரைக் ரேட்:- 148

இதப்பாருங்க> IPLலில் இந்த நான்கு அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் மும்பை-ஆர்சிபிக்கு என்ன நடக்கும்?

அவர் மிடில் ஆர்டரில் ஆடி CSK அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை.

அம்பதி ராயுடு இந்த சீசன் ஆடவே விரும்பவில்லை. அவர் ஏற்கனவே ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டார். ஆனால் விருப்பம் இன்றி சென்றவரை பிடித்து இழுத்துவைத்து CSK அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதப்பாருங்க> “எம்எஸ் தோனி எனக்குப் பின்னால் நிற்கிறார் என்பதை அறிய…”: CSK மோதலில் இருந்து RR Star’s Fanboy Revelation

இதனால் இவரை உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு மிடில் ஆர்டர் வீரரை தோனி களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் இருவரும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக அணிக்குள் மிட்சல் சான்டர் மற்றும் ஒரு இந்திய வீரரை கொண்டு வர வேண்டும். இவர்கள் இந்திய அணியில் இருப்பதால்தான் அணிக்குள் பெரிய குழப்பமே நிலவி வருகிறது.

இதப்பாருங்க> ‘அதனால்தான் நாங்கள் அவரை ஏலம் எடுத்தோம்’: ரஹானேவுக்கான ஐபிஎல் 2023 ஏல ஏலத்திற்கு முன்னதாக எம்எஸ் தோனியின் மந்திர வார்த்தைகளை சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி வெளிப்படுத்தினார்

இவர்களை நீக்க வேண்டும். மாறாக ராயுடுவிற்கு பதிலாக ராஜவர்தான் ஹங்கரேக்கர் போன்றவர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். அவர் நல்ல ஹிட்டர். அதேபோல் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடிய வீரர். அதனால் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *